Thursday, July 28, 2005

என் வலைப்பூ பயணம் ..........

ஒன்றிரண்டு பதிவுகளில் பின்னூட்டமிட்டுருந்தாலும் வலைப்பூ ஆரம்பிக்கும் முன் நிறைய யோசிக்க வேண்டியதாயிருந்தது. ஏனென்றால் முதலில் நோக்கத்தை தெளிவுபடுத்திக்கொண்டால் தான் வெளிப்பாடு அதற்கு தக்கமாதிரி இருக்கும் என்று.

கீழ்கண்ட விஷயங்களுக்காக எழுதப்போவதில்லை என்று முடிவு செய்துவிட்டேன்.

அடுத்தவர்களை திருத்துவதற்கு(நம்மாலேயெ இன்னும் கோவத்தை கட்டுப்படுத்த முடியவில்லை இதில என்ன போய் மத்தவங்களுக்கு சொல்றது)

பிரபலமாவதற்கு(அந்த கஷ்டம் நமக்கு வேண்டாம்டா என்று முடிவெடுத்துவிட்டேன்)

புரட்சி செய்வது( தமிழ்நாட்டில் அந்த வார்த்தையே கேவலப்படுத்திட்டாங்க, இப்ப ஸ்கூல் பசங்ககிட்ட போய் செ குவாரா அப்படின்னு ஒரு புரட்சிக்காரர் தென் அமெரிக்காவில் இருந்தார் அப்படின்னு சொன்ன அவங்க அவரை விஜயகாந்த், சத்தியராஜ், பாக்கியராஜ், முரளி கூடவெல்லாம் மனசுக்குள்ள ஒப்பிட்டு கேவலப்படுத்திடுவாங்க)

அப்புறம் என்ன மயித்துக்கு எழுதறது, கம்னு கடாசிராலமன்னு ஒரு எண்ணம் வேற. அப்பத்தான் ஒரு விடை கிடைத்தது.
என் திருப்திக்கு எழுதலாம்னு. வாழ்க்கையில் மனிதனக்கு அவன் ஈகோ வை திருப்திதான்றதுதான் பெரிய Challengeனு நினைக்கிறேன்.

சரின்னு எழுதலாம்னு ஆரம்பித்து ஒரு ஏழு பதிவும் எழுதியாச்சு. அப்பத்தான் தோணியது எழுதுவது எவ்வளவு கடினம் என்று. கைவலித்தது என்பது கூட பெரிய விஷயமில்லை ஆனால் நினைத்ததை எழுத்துக்குள் கொண்டுவருவது இருக்கிறதே அதுதான் பெரிய விஷயம்.
எழுதன பதிவெல்லாம் இப்ப வாசித்ததுக்கு பிறகுதான் தோணுது இன்னும் அதையெல்லாம் நல்லா எழுதியிருக்கலாம் என்று. அதுபோக எழுதிய பெரும்பாலான விஷயங்கள் பிரச்சாரப்பட பாணியில் இருந்ததை காணமுடிந்தது. இதற்காக நான் வருத்தபடவில்லை இருந்தாலும் சிலர் அவர்களின் பொன்னான நேரத்தை செலவிட்டு அவைகளை வாசித்து இன்னும் சிலர் அதற்கு பின்னூட்டமும் இட்டிருந்தனர்.
அவர்களின் பொறுமைக்கு என் நன்றி.

தற்போது நான் பணிமாறபோவதால் இனி அதிகம் எழுத நேரமும் வசதியும் கிடைக்குமா என்று தெரியவில்லை. எனவே கிடைத்த நேரத்தில் இவ்விஷயங்களை எழுத நினைத்தேன், எழுதி விட்டேன்.

பார்போம் தோழர்களே (இதைப்பார்த்து நான் கம்யூனிஸ்ட்னு யாரும் தப்ப நினைச்சிடாதீங்க)

4 comments:

Sud Gopal said...

அடடே...நீங்களுமா பொட்டியக் கட்டப் போறீங்க.உங்க சமீபத்திய பதிவுகள் ரொம்பவே நல்லா இருந்தது.இந்த வார இறுதியில அதுகளுக்கு பின்னூட்டம் இடலாம்னு நெனச்சிட்டு இருந்தேன்.சரி விடுங்க.

உலகம் ரொம்பவும் சின்னதாமே.கண்டிப்பா எப்பாவாவது,எங்கயாவது சந்திக்காமாலா போகப் போறோம்.

இன்னும் கொஞ்ச நாள்ள இதே அறிவிப்ப நானும் செய்ய வெண்டி வந்தாலும் வரலாம்.பணி மாற்றம் தான் இங்கேயும் காரணம்.

புதுப் பணியில சிகரங்களைத் தொட வாழ்த்துக்கள்...

வீ. எம் said...

திருமலை,

மிக தெளிவாக சொல்லியுள்ளீர்கள்.. அழகான , அர்த்தமுள்ள வரிகள்!
புது வேலையில் சிகரம் தொட வாழ்த்துக்கள்!
அதே நேரத்தில், புது வேலையினால் தங்கள் எழுத்துக்கள் தடைபடாமல் இருக்கும்படி அமையவேண்டுமென விருப்பம்.
வீ எம்

கயல்விழி said...

திருமலை சென்ற இடம் எல்லாம் சிறக்க வாழ்த்துக்கள். உங்கள் எழுத்துக்கள் தொடரவும் வாழ்த்துக்கள். அடிச்சுப்பிடிச்சு எழுதுங்க என்ன பண்ணறது. முடியாதென்றா முடியாது தான் முயற்சி செய்யுங்கள் பலன் கிடக்கும்.

Vetri Thirumalai said...

சுதர்ஸன் பெட்டியெல்லாம் கட்டவில்லை. எழுத நேரம் இருக்குமா என்றுதான் தெரியவில்லை. புதிய பணியில் இணையத்திற்கு கட்டுப்பாடு இருக்கிறது என்று கேள்விப்பட்டேன். எனது வீட்டில் வேறு இன்னும் இணையக்கனெக்ஷன் கிடைத்தபாடில்லை. ஒரு பதிவு எழுதவே ஒண்றரை முதல் இரண்டு மணி நேரம் ஆகிறது. ஆகவே இந்த நிலை. பார்ப்போம் எப்படி அமையப்போகிறதென்று!