Tuesday, May 12, 2009

இந்தியனாக இருப்பதற்கு வெட்கப்படுகிறேன்!!

2002-ல் இந்தியா இங்கிலாந்தில் ஒரு கிரிக்கெட் இறுதியாட்டத்தில் தோல்வியின் விளிம்பின் இருந்து வென்றபோது அன்று வீதியில் திரிந்து "ஐ லவ் இந்தியா" என்று போவோர் வருவோரிடம் எல்லாம் கத்தினேன்.

இந்தியா 1998-ல் அமெரிக்க செயற்கைகோள்களை ஏமாற்றிவிட்டு புத்திசாலித்தனமாக தன் இரண்டாவது அனுகுண்டு சோதனையை நடத்திய போது வாரக்கணக்கில் நண்பர்களிடம் பெருமை அடித்துகொண்டிருந்தேன்.
இதைப்போல எத்தனனயோ சம்பவங்கள்....

ஆனால் இன்று?

முட்டாளாய் இருந்திருந்தாலாவது, ராஜபக்க்ஷே மேல் சாபமிட்டு கொண்டு அமைதியாக இருக்கலாம். ஆனால் கொஞ்சூண்டு சிந்திக்க தெரிகிறதே.
இன்று ஈழதமிழர் படும் அத்துனை துன்பத்திற்கும் நான் பிறந்த நான் போற்றிய இந்தியா தான் வேறு எவரும் இல்லை என்ற நிலைமையில் நான் எங்கே போய் என் நாட்டுப்பற்றை வீசுவது.

இன்று அபிஷேக் சிங்வி மற்றும் சுதர்சனம் சொன்னார்கள். அங்கே மக்கள் கொல்லபடுவதற்கு கவலை மட்டும் தான் தெரிவிக்க முடியுமாம். வேறு ஒன்றும் செய்ய இயலாதாம்.

இதை 5 வருஷத்துக்கு முன்னாடியே செஞ்சிருந்தா அவங்க இப்போது நிம்மதியாக் இருந்திருப்பாய்ங்களேயா. இப்படி திட்டம் போட்டு கொன்னுட்டிங்களே..

ஐந்து வருட வராலாறை படித்தால் தான் தெரிகிறது சோனியா ஏன் போனமுறை(2004) ஆட்சிக்கு அலைபாய்ந்தார் என்று.

2004 ல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழ்நிலையில் சோனியா பிரதாமவதற்கு சிக்கல் நேர்ந்தது. கடைசிநேரத்தில் பிரதமாராக அறிவிக்க பட்டது நாம் எல்லோருக்கு தெரியும்.
ஆனால் அதேநேரம் ஈழதமிழர்களுக்கு புதைகுழி தோண்ட சோனியா முதல் பிடி மண்ணை அள்ளியது எவ்வளவு பேருக்கு தெரியும்?

மன்மோகன் சிங் பிரதமரென தீர்மானிக்கப்பட்டது கூட கடைசி நேரத்தில் தான். ஆனால் அதற்கு முன்பே இரண்டு முக்கிய பதவிகளை சோனியா தீர்மானித்து விட்டார்.

ஒன்று - தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
இரண்டு - பிரதமரின் சிறப்பு ஆலோசகர் உள்நாட்டு பாதுகாப்பு.

முதல் பதவிக்கு அமர்த்தபட்டவர் J.N. தீக்க்ஷித். இந்திய அமைதி(?)படைக்கும் புலிகளுக்கும் யுத்தம் மூட்டிவிட்டதில் இவரின் பங்கு ஜெயவர்த்தனேவுக்கு நிகரானது என்று ஈழத்தை படித்த அனைவருக்கும் தெரியும்.

இரண்டாவது பதவிக்கு, 1992-ல் ஓய்வு பெற்று பன்னிரண்டு வருடம் ஈசி சேரில் அமர்ந்து ஹிந்து பேப்பர் படித்து கொண்டிருந்த எழுபது வயது இளைஞரான M.K. நாராயணன் அமர்த்தபட்டார்.
ஈழவிவகாரத்தில் 1987 முதல் 1990 இவர் செய்த குழப்பம் அதிகாரவர்க்க மேல்மட்டத்தில் மிக பிரசித்தம்.

ஆகவே இப்படியாக , இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய கொலைகளத்திற்கான திட்டத்தை ஐந்து வருடத்திற்கு முன்னமே நம் பாரதத்தின் பெருமைக்குரிய இரவல் அன்னை வெற்றிகரமாக அடிக்கல் நாட்டினார்.

ஆனால் இன்று தீவுத்திடலில் முழங்குகிறார், நாங்கள் தமிழருக்கு சம உரிமை கிடைக்க பாடுபடுவோம் என்று.

இதை கேட்கிற என் காதுகளுக்கு எங்கே சென்று ஈயத்தை ஊத்துவது.

எங்கே சென்று இந்த அவலத்தை முறையிடுவது. கண்டிப்பாக கடவுளிடம் இல்லை. அப்படி ஒருவர் இருந்தால் இந்நேரம் வந்திருக்கவேண்டுமே!!

Monday, May 11, 2009

என்னை கவர்ந்த பதிவர்களுள் ஒருவருனா தமிழ்சசியுடன் கருத்து மாறுபடுகிறேன்

கிட்டதட்ட நான்கு வருட வனவாசத்திற்கு பிறகு நான் எழுதும் முதல் பதிவு இது.



சில நாட்களாக மறுபடியும் எழுதலாம் என்று எண்ணியபோதும் சூழ்நிலை அமையவில்லை. ஆனால் இன்று சசியின் "போதுமடா இந்த ஈழப் போராட்டம்" பதிவை பார்த்தவுடன் பொறுக்க முடியவில்லை.



சசியின் எழுத்தை நான் தொடர்ந்து படித்து வருபவன். அவரின் சிந்திக்கும் திறன் கண்டு வியந்திருக்கிறேன். ஆனால் அவரின் இந்த பதிவு எனக்கு ஒர் அதிர்சியை தந்தது. ஆதலால் அவரின் இந்த பதிவுக்கு பதிலாக ஒரு பதிவே போடும் முடிவுக்கு வந்தேன்.



தமிழ்மக்கள் படும் இன்னல்களுக்கு யார் காரணம்?புலிகளா ?கண்டிப்பாக இல்லை. இன்று புலிகள் இல்லாவிட்டாலும் மக்கள் இதே இன்னல்களை (இன்னும் அதிகம் கூட) அனுவித்திருப்பார்கள்.



சிங்கள வெறியர்களா?இவர்களும் இல்லை. ஒரு வெறிபிடித்த மிருகத்திடம் கருனையை எப்படி எதிர்பார்க்காலாம். அதற்கு தெரிந்தது எல்லாம் நாசம் விளைவிப்பது.



வேறு யார்தான் பொருப்பேற்பது.கண்டிப்பாக இந்தியாவும் அதன் குடிமக்களாக வாழும் என்னைப்போன்ற மானங்கெட்ட தமிழர்களும் தான்.



இன்று இந்த பிரச்சினையில் எந்த நாடுகளும், அமெரிக்கா உட்பட, தலையிட முடியாமல் இருப்பதற்கு காரணம் யார்? இந்தியா மட்டும்தான்.

ஐரோப்பிய நாடுகளுக்கு சீனா ஒரு பெரிய பொருட்டல்ல. சீன ஒலிம்பிக் ஜோதியின்போது நடந்ததை எண்ணிப்பாருங்கள்.



ஹில்லாரி கிளின்டன் இந்த பிரச்சினையின் சாரம்சம் அறிந்திருந்தும் கூட, அமெரிக்காவிடமிருந்து ஒரு அறிக்கை வந்ததே ஒழிய வேறு எதுவும் நடக்க வில்லை. ஏனென்றால் இன்றைய நிலைமையில் அமெரிக்காவிற்கு இந்தியா ரொம்ப தேவை.



இந்தியா நினைத்திருந்தால் எப்பொழுதோ தனி ஈழம் அமைந்திருக்கும். ஏன் சும்மாயிருந்தால் கூட அது அமைந்திருக்கும். அது நடக்காததற்கு யார் காரணம்



இவவளவு நாளா ஈழம் தனிநாடாகிறதிற்கு தான் இந்தியா எதிர்ப்பாக இருக்கிறது ஆனால் ஈழமக்களுக்கு அல்ல என்று (ஈழ)தமிழர்கள் திடமாக நம்பினார்கள்.

அதிலும் நம் தமிழின தலைவர் கட்சி அங்கம் வகிக்கும் இந்திய அராசாங்கம் ஈழ மக்கள் வாழ வேண்டுமானால் உதவ மறுப்பார்களே ஒழிய சாக கண்டிப்பாக உதவ மாட்டார்கள் என் திடமாக நம்பினார்கள்.


இன்று புலிகளை குற்றம் சாட்டுவபர்களுக்கு ஒர் உண்மையை எடுத்து கூறவேண்டும். புலிகள உன்மையாகவே மக்களை பிடித்து வைத்திருந்தால் ஏன் உலகெங்கிலும் உள்ள பெரும்பாண்மையான ஈழ மக்கள் அவர்களுக்கு எதிராக பேசவில்லை. ஏன் அவர்களின் ஈழ சொந்தங்கள் அவர்களிடம் முறையிடவில்லை.



நீங்கள் பிபிசி சொன்னதை தான் நம்ப வேண்டுமென்றால் ஒடுக்கபட்டவர்களின் கருத்து ஒன்றுமே நம் காதுக்கு வராது.
பிபிசி வெறும் ஒரூ கமர்சியல் தொலைக்காட்சி. தமிழர்களும் பார்க்க வேண்டும் என்பதற்காக நடுநிலையாக உள்ளது போன்ற ஒரு தோற்றத்தை கொடுக்கிறார்கள். மற்றபடி அவர்களும் ஒடுக்குமுறைக்கு ஆதரவானவர்களே.


உங்கள் பதிவை பார்த்தவுடன் நிறைய மனிதாபமானிகள்(?) ஒடோடி வந்துவிட்டார்கள் பின்னூட்டமிட. ஆனால் கொத்து கொத்தாக தமிழர்கள் சாகிறபோது இந்த நாய்கள் குரைப்பதே இல்லை அப்படிபட்ட தெருநாய்களுக்கு பிறந்த கேவலாமான ஜன்மங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்து விட்டீர்களே என்று நினனைக்கும் போதுதான் கஷ்டமாக உள்ளது.