Tuesday, July 26, 2005

அவரும் ஒரு மனிதன் தானே-----

இன்றைய வலைப்பதிவுகளில் ரஜினியை பற்றி யார் எழுதினாலும் உடனே பின்னூட்டங்கள் குவிந்து விடுகின்றனர். பாதிப்பேர் ஆதரவளிக்கின்றனர் மீதிப்பேர் எதிர்கின்றனர். பத்தாதற்கு மாறி மாறி வசைச்சொற்கள் வேறு பயன்படுத்தபடுகின்றனர்.

இதற்கான காரணங்களை அலச ஆரம்பித்ததின் தொடக்கம்தான் இந்த பதிவு.
முதலில் ரஜினி யார்?
அவர் கர்நாடகத்திலிருந்து வந்தவர், மகராஷ்டிரத்திலிருந்து வந்தவர் என்று நிறைய பேர்களும் நான் முதலில் ஒரு இந்தியன் பிறகு ஒரு தமிழன் என்று அவரும் கூறுகின்றனர்.
ஆனால் என்னை பொருத்தவரை முதலில் அவர் ஒரு மனிதன்.

ஒரு மனிதன், அவர் மட்டுமல்ல நாமெல்லோரும்தான், வாழ்வில் என்ன செய்கிறோம்? முதலில் படிக்கிறாம், அது முடிந்தவுடன் பிழைக்க ஒரு வேலை தேடுகிறோம். ஆரம்பத்தில் பிடித்த வேலையாக் தேடுகிறோம் அது கிடைத்தால் சந்தோஷம் இல்லாவிட்டால் பொழப்புக்காக ஒரு வேலையை தேடி அதில் அமர்கிறோம். இதில் சிலர் அவரவர் சொந்த இடத்தை விட்டு வேறு மாநிலங்களுக்கு, நாடுகளுக்கும் செல்கின்றனர். அதன்பின் சேமிக்க,சொத்து சேர்க்க, சமூகத்தில் பேர் புகழ் அடைய, அவரவர் தகுதிக்கேற்ப முயல்கிறோம்.
இதைத்தானே அவரும் செய்தார்.

நான் ரஜினி படங்களை சிறுவயதில் இருந்தே பார்த்து வருகிறேன். நான் என்ன அவர் சந்தோஷத்துக்கா பார்க்கிறேன். என் சந்தோஷத்துக்காக என் மனமகிழ்வுக்காக பார்க்கிறேன். இதில் அவர் என்னிடமிருந்து கொள்ளையடிக்கிறார் என்று சொல்ல முடியுமா!. என்னைபோல பலரை மகிழ்விப்பதால் அதனால் பயன் அடையும் வியாபாரிகள் அவருக்கு அச்சம்பளம் கொடுகின்றனர். இதை குற்றமென்று சொல்ல முடியுமா. அவர் அப்பணத்தை என்ன செய்கிறார் என்பது அடுத்து விவதத்துகான விஷயம்.

இப்போது நான் வெளிமாநிலத்தில் இருக்கிறேன். என் அண்ணன் தங்கைகள் என் சொந்த ஊரில் இருக்கின்றனர். என் தகுதிக்கேற்ப இவ்விடத்திலும், சொந்த ஊரிலும் சொத்து வாங்க முயலுவேன். இதை தப்பு என்று யாராவது கூற முடியுமா?
சிலர் சொல்வது போல் ரஜினிக்கு போயஸ் கார்டன், கேளம்பாக்கம் மட்டும் தமிழ்நாட்டில் சொத்துக்கள் அல்ல. அதுபோக நிறைய தமிழ்நாட்டு நிறுவனங்களிலும் அவர் பங்குகள் வைத்துள்ளார். காசு கொடுத்தமா படம் பார்த்தாமான்னு வரனும். அதைவிட்டு நாங்க கொடுத்த காசை நீங்க இப்படித்தான் செலவு செய்ய வேண்டும் என்று சொல்ல கூடாது. நம்ம முதலாளி நீ சம்பளத்தை நான் சொல்றமாதிரிதான் செலவு செய்யனும்னு சொன்னா எவ்வளவு தப்போ அது மாதிரிதான் இதுவும்.

சிலர் ரஜினியை வெறுப்பதற்கு சில ரஜினி ரசிகர்களும் காரணம் என்று நினனக்கிறேன். எதாவது சொல்லிட்டா போதும் உடனே "எங்க தலைவனையா சொல்றே, டேய் டூய் "னு குதிக்க வேண்டியது. அவர்களுக்கு நான் சொல்லிக்க விரும்புவது, உங்களுக்கு பிடிச்சிருக்கா உங்களோட வெச்சுக்கங்க. மத்தவங்களுக்கும் பிடிக்கணும்னு நினைக்கதீங்க. பிடிக்காத் கருத்தை யாராவது சொன்னா நிதானமா அதற்கு பதில் கொடுங்க. அதைவிட்டுட்டு கசாமுசான்னு பேசாதீங்க.
இதற்கு ரஜினியின் செய்கை மூலமே ஒரு உதாரணம் தர விரும்புகிறேன். காவேரி பிரச்சினையில் நெய்வேலி மாநாட்டில் பாரதிராஜா ரஜினியை கன்னாபின்னா என்று திட்டி தீர்த்தார். அடுத்தநாள் ரஜினி உண்ணவிரதத்திர்க்கு கிளம்புவதற்கு முன் சில நிருபர்கள் அதைப்பற்றி கேட்டதற்கு அவர் "அவர் பேசியது தப்பு ரொம்ப தப்பு" என்று ஒற்றை வரியில் டீசண்டாக முடித்துகொண்டார். எனக்கு தெரிந்து ரஜினி இதுவரை அதைப்பற்றி எந்த பேட்டியிலும் பேசவில்லை. அதன் பின்னர் பாரதிராஜா கூட ரஜினியை பாராட்டி(என்ன விஷயமென்று மறந்து விட்டது) பேசினார்.

எனக்கும் ரஜினியை அவரது திரைப்படங்களையும் தாண்டி பிடிக்கும். அதற்கான காரணங்களை கீழே கொடுத்துள்ளேன்.

கருப்புநிற ஹிரோவாய் தமிழ் சினிமாவில் ஒரு Trend Setter.

சினிமாவில் மட்டுமே நடிப்பது

சின்ன சின்ன கட்சிகள் கூட சென்னையில் மாநாடு நடத்துகிறோம் என்று லாரியில் கூட்டம் சேர்க்கும் பொழுது தான் உண்ணாவிரதம் நடத்திய்போது வெளிமாவட்டங்களிலிருந்து யாரும் வரவேண்டாம் என்று கூறியது(வரச்சொல்லியிருந்தால் வந்த கூட்டத்தால் சென்னை ஸதம்பிட்த்து இருக்கும் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை)

இன்றுவரை ரசிகர்களை தன் சுயலாபத்துக்காக பயன்படுத்தாமல் இருப்பது(மாற்றி கருத்து இருப்பவர்கள் பொருக்க, இதற்காக ஒரு பின்னூட்டத்தை வீண் செய்ய வேண்டாம், இது என் கருத்து)

ஒரு படத்திற்கு பத்து கோடிவரை குடுக்கும் தயாரிப்பாளர்கள் இருக்குபோது கூட காசுக்காக படம் பண்ணாமல் நிதானமாக காலம் எடுத்து படம் செய்வது

ஜெயலலிதாவை தீவிரமாக எதிர்த்த நிலையிலும் அவரின் தன்னம்பிக்கை என்னை கவர்ந்த விஷயம் என்று சொன்னது(அதற்கு பிறகு ஜெ போராடி ஜெயித்த விஷயம் அவரின் தன்னம்பிக்கையை உலகிற்கு பறைசாற்றியது)

பாமாக அவர் படத்திற்கு எதிரான வன்முறையில் ஈடுபட்ட போது ரசிகர்களை வன்முறையில் ஈடுபடச்செய்யாமல் அடக்கி வாசித்தது(ரசிகர்கள் பாதிப்படையக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில்)

நேற்று முளைத்த சிறு நடிகர்கள் கூட எங்கள் படம் பிளாப்பில்லை வியாபாரரீதியில் லாபம்தான் என்று கூறும்போது 5 கோடிக்கு மேல் லாபம் பார்த்த பாபா படத்தை பிளாப் என்று பெருந்தென்மையாக கூறியது

இன்னும் நிறைய இருக்கிறது. இப்போதைக்கு இதுபோதும் என்று நினைக்கிறேன்.

இதைப்போலவே அவரிடம் பிடிக்காத சில விஷயங்களும் சில இருக்கின்றன. அவை

இவர் பெயரை உபயேகித்து அவர் குடும்பத்தினர் செய்யும் சில கூத்துக்கள்(உதாரணமாக ரஜினி 25 நிகழ்ச்சி- இதற்கு அவர் உண்மையாகவே அவர் உடன்பட்டாரா என்று தெரியவில்லை)

அவரை சுற்றி இருக்கும் ஒரு காக்காய் கூட்டம்(பாபா படத்தின்போது இவர்களின் சில செய்கைகளினால் நிறைய விமர்சினங்கள் எழுந்தனர்)

அவசரப்பட்டு எடுத்த சில அரசியல் முடிவுகள்(இதற்கு அந்த காக்காய் கூட்டமும் காரணம் என்று நினைக்கிறேன்) ஏனென்றால் இந்த முடிவுகள் எடுப்பதற்குமுன் சாதாரண மக்கள் சிலரை சந்தித்திருக்க வேண்டும் இல்லாவிட்டால் சும்மாயிருந்திருக்க வேண்டும்.

அவர் படங்களில் வரும் சில தேவையில்லாத தனிமனித துதிபாடல் வசனங்கள்(உதாரணமாக சந்திரமுகியில் பிரபு ரஜினியைப்பற்றி பேசும் சில வசனங்கள்)

எல்லத்தையும் சீர்தூக்கி பார்க்கும் போது அவர் மத்தவங்களுக்கு கெடுதல் செய்யாதவராகவே தெரிகிறார். மத்தவங்களுக்கு நல்லது பண்ணாவிட்டாலும் பரவாயில்லை ஆனால் கெடுதல் நின்னக்காம இருந்தாலே போதும் என்பது என் கருத்து.

பின்குறிப்பு:
இன்னும் நிறைய எழுத நினைத்தேன் ஆனால் கைவலிப்பதால் அதை சமயம் கிடைக்கும்போது இன்னொரு பதிவில் பதிக்கிறேன்.

5 comments:

Vetri Thirumalai said...

மேல விட்டுப்போன ஒரு விஷயம்.
இப்பல்லாம் ரஜினியை பற்றி பதிவுகள் போட்டால் அனானிமஸாக வந்து கொதர்ற பின்னூட்டங்கள் அதிகமாகிவிட்டது. அதனால் இந்த பதிவுல மட்டும் அந்த வசதியை எடுத்து விட்டேன். (இல்லாட்டா நம்ம பதிவை யூஸ் பண்ணி அவ அவன் அடிச்சுக்குவான்) அனானிமஸ் நண்பர்கள் மன்னிக்கவும்.

பினாத்தல் சுரேஷ் said...

நல்ல அலசல் வெற்றி திருமலை.


அவரை ஆண்டவன் என்று கொண்டாடவும் வேன்டாம், கீழே போட்டு மிதிக்கவும் வேண்டாம். - படம் வந்தால், விருப்பம் இருந்தால் பார்க்கலாம் - அவ்வளவுதான்.

(இல்லாட்டா நம்ம பதிவை யூஸ் பண்ணி அவ அவன் அடிச்சுக்குவான்) - இப்போ மட்டும் என்ன? ப்ளாக்கர் ஐ டி உபயோகிச்சு அடிச்சுக்கப் போறாங்க அவ்வளவுதானே?

குழலி / Kuzhali said...

தற்போதைக்கு 'நோ கமெண்ட்ஸ்', பிறகு ஒரு நாள் நிதானமாக வரிக்கு வரி விளக்கமாக என் பதிவிலேயே போடுகின்றேன்

dondu(#4800161) said...

"இப்பல்லாம் ரஜினியை பற்றி பதிவுகள் போட்டால் அனானிமஸாக வந்து கொதர்ற பின்னூட்டங்கள் அதிகமாகிவிட்டது. அதனால் இந்த பதிவுல மட்டும் அந்த வசதியை எடுத்து விட்டேன். (இல்லாட்டா நம்ம பதிவை யூஸ் பண்ணி அவ அவன் அடிச்சுக்குவான்) அனானிமஸ் நண்பர்கள் மன்னிக்கவும். "

அப்ப இது என்ன? அனானிமுஸ் பின்னூட்டங்கள்? நான் வந்து விட்டேன் அல்லவா? தானே அவை தொடரும். போலி டோண்டு வருவார் ஜாக்கிரதை.

ரஜனியைப் பற்றி. அவர் உழைத்து சம்பாதிக்கும் காசை என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். இக்கருத்துடன் 100 சதவிகிதம் ஒத்து போகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Bagyaraj Sekar said...

All points... 100% truth..

Sorry I don't know how to type in Tamil in this blog..