Thursday, July 21, 2005

ஏன் அவர்களை இப்படி?

இந்த விஷயம் ரொம்ப நாளாகவே என் மனதில் உறுத்திகொண்டிருந்தது. இன்றுதான் அதை பதிவு பண்ண ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. என்னடா இன்னும் விஷயத்தையே என்னன்னு சொல்லாம பினாத்திகிட்டு இருக்கானேன்னு சபிக்கறதுக்கு முன்னாடி சொல்லிடறேன் இது பாலியல் தொழிலாளர்களை பற்றியது.

அப்பப்ப தினசரிகளில் அழகிகள்(?) கைது அப்படின்னு கட்டம் கட்டி படத்தோட செய்தி வரும் அதுலவேற நம்ம தொப்பை போலீஸ் போஸ் கொடுத்துக்கிட்டு நிப்பாய்ங்க. அப்பத்தான் யோசனை வரும் அந்த பாவப்பட்ட அழகிகள் அப்படி என்ன குத்தம் செஞ்சிட்டாங்கன்னு இப்படி போட்டு மானத்தை வாங்குரானுகண்னு.

மும்பை கமிஷனர் ஒருவர் கூட ஒருமுறை சொன்னார். மும்பையில் இருக்கும் ஆண்களில் 60% பேர் பிரம்மசாரிகள் அவர்களுக்கு பெரும் வடிகாலாய் இருப்பது பாலியல் தொழிலாலர்கள்தான். அத்தொழிலை நிறுத்தினால் வீதியில் போகும் குடும்ப பெண்களுக்கு அது ஆபத்தாகிவிடும் என்று.

அப்படி உடல் அரிப்பெடுத்து சுகத்துக்காக அலையும் மனிதர்கள் மத்த குடும்ப பெண்களிடம் சில்மிஷம் செய்யாமல் தடுத்து அவர்களின் அரிப்பை தீர்த்து அதற்கு கூலியை பெற்றுக்கொள்கிறார்களே அதுவா பெரிய தப்பு? எதற்கெடுத்தாலும் போரடும் மனித உரிமை, மகளிர் அமைப்புகள் ஏன் இவர்கள் அவமானபடுத்துவதை மட்டும் பெரிதாக கண்டுகொள்வதில்லை என்று தெரியவில்லை

என்ன அவங்க வேற வேலையிருந்து அதை பண்ணாமய இந்த தொழிலுக்கு வராங்க. எதோ வயித்து பொழப்புக்கு வேற வழியில்லாம் இதை பண்ண வேண்டியதா இருக்குது. இதில்லாம வெறும் உடலைக்காட்டும் டான்ஸ் மட்டும் செஞ்சு குடும்பத்தை பார்த்துகலாம்னா அதுக்கும் அரசாங்கம்(மும்பை) ஆப்பு வெச்சிருச்சி. டான்ஸ் பார் தடைக்கு அப்புறம் பேட்டி கொடுத்த பெண்களெல்லாம் "எதோ உடம்ப மட்டும் காட்டி பொழப்ப பார்த்துகிட்டு இருந்தோம். இனி உடலை விக்கிறதை தவிர வேற வழியில்லை" என்று சொன்னார்கள். டான்ஸ் பார்களின் தடைகளினால் பாதிக்கப்பட்ட பெண்கள் 5000 கும் மேலயாம். எதோ கமிஷன் தகராறுல மும்பை அரசாங்கம் அவங்க வயித்தில அடிச்சிருச்சு.

இங்க தமிழ்நாட்டுல என்னடான்னா மாசக்கடைசியில் கேசு கிடைக்கலியா அவங்களை பிடித்து உள்ள போடு என்கிறமாதிரி கொதறிவிடுகிறார்கள். இதற்கு ஒரே தீர்வு இதை சட்டரீதியா அங்கீகரித்துவிடுவதுதான் என்று நினைக்கிறேன். கூடவே ஒரு லைசன்ஸ் முறையும் கொண்டுவந்திட்டா அவங்க சம்மதிமல்லாமல் தொழிலுக்கு அழைத்துவரப்படுகிறவர்களையும் காப்பாற்றி சம்பந்தபட்டவங்க மேல நடவடிக்கை எடுக்கலாம். எந்த அரசாங்கம் தைரியத்துடன் இதை செய்யப்போகிறதென்று தெரியவில்லை. பார்ப்போம்?

4 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//இதற்கு ஒரே தீர்வு இதை சட்டரீதியா அங்கீகரித்துவிடுவதுதான் என்று நினைக்கிறேன்//

உங்கள் கருத்தில் உடன்படுகிறேன். இந்த விஷயத்தை கவனித்து எழுதியது சிறப்பு. இது போல அரவாணிகளுக்கு தேவையின்றி இழைக்கப்படும் அவமானங்கள் குறித்தும் விழிப்புணர்வு தேவை.

Sud Gopal said...

"அப்பப்ப தினசரிகளில் அழகிகள்(?) கைது அப்படின்னு கட்டம் கட்டி படத்தோட செய்தி வரும் அதுலவேற நம்ம தொப்பை போலீஸ் போஸ் கொடுத்துக்கிட்டு நிப்பாய்ங்க."
இத்தப் படிச்சதும் எனக்கு ஒரு மேட்டர் நினைவுக்கு வருது.
சில தினசரி செய்தித்தாள்கள்ல இந்த மாதிரி மசாலா நியூஸ் வராத நாளே கிடயாது.."40 வயது அழகியை நான்கு பேர் கடத்திச் சென்று கதறக் கதறக் கற்பழித்தனர்.போலீஸ் அவர்களை வலை வீசித் தேடிக் கொண்டிருக்கிறது"

சரி சரி மேட்டருக்கு வருவோம்.
"எதற்கெடுத்தாலும் போரடும் மனித உரிமை, மகளிர் அமைப்புகள் ஏன் இவர்கள் அவமானபடுத்துவதை மட்டும் பெரிதாக கண்டுகொள்வதில்லை என்று தெரியவில்லை"
ஹூம்..யோசிக்க வேண்டிய விஷயம் தான்.

திருமலை, ஊதர சங்கை எல்லாரும் சேர்ந்து ஊதிட்டே இருப்போம்.எல்லாரும் சேர்ந்து இழுத்தா தேர் என்ன நகராமப் போயிடுமா??

பதிவுக்கு வாழ்த்துக்கள்...தொடரட்டும் உங்களது பிளிரல்..சாரி..சாரி....முழக்கம்....

Chandravathanaa said...

திருமலை

மகளிர் அமைப்புக்கள் மட்டுமல்ல இன்னும் சில நன்நோக்கு நிறுவனங்களும் பால்வினைத் தொழிலை சட்டரீதியாக்க வேண்டுமென்று குரல் கொடுத்துள்ளன. 2002இன் ஆரம்பத்தில் விலைமாதர்கள் தமது பால்வினைத்தொழிலை பதிவு செய்து கொள்ள வேண்டுமென்றதொரு சட்டம் யேர்மனியில் அமுல் படுத்தப் பட்டது. பதிவு செய்வதால் அவர்களுக்கான எல்லா காப்புறுதிகளும் செய்யப் பட்டுஇ அவர்களது எதிர்காலம் செழுமைப் படுத்தப் படும் என்பதும்இ பதிந்து பால்வினைத் தொழிலைச் செய்யும் போது தரகர்களினதும் விபச்சாரவிடுதி நடத்துனர்களதும் அவர்கள் மீதான அராயஜகம் தவிர்க்கப்படும் என்பதும் யேர்மன் அரசின் நம்பிக்கையான நன்நோக்கம்.

இந்தக் காப்புறுதிகளில் சுகவீனக்காப்புறுதி, பென்சன்காப்புறுதி... போன்ற பல நல்ல விடயங்கள் அடங்குகின்றன. ஆனாலும் இதுவரையில் எந்தப் விலைமாதரும் வந்து இதற்கான அலுவலகத்தில் தம்மைப் பதிந்து கொள்ளவில்லையென இவர்களுக்கான சட்டங்களுக்கும், தேவைகளுக்கும் பொறுப்பான Juanita Henning கவலை தெரிவித்துள்ளார்.

இதற்கு ஒரு விலைமாது கொடுத்த பதில் பத்திரிகைச் செய்தியாக வந்துள்ளது. அவர் கூறுவதாவது "பால்வினைத்தொழிலில் நேரடியாகப் பணத்தைப் பெற்றுக் கொள்வதால் அந்த வேலை செய்பவர்களை மற்றைய வேலைகள் செய்பவர்கள் போலக் கருதாமல் ஒரு வர்த்தக நிறுவனம் வைத்திருப்பவர் போலவே கருதுகிறார்கள். அதனால் அதற்காக வசூலிக்கப் படும் வரிகளும் வர்த்தகர்களுக்குப் போலவேதான் வசூலிக்கப் படும். அதாவது ஒரு விலைமாது ஒருநாளைக்கு 250யூரோ உழைப்பதாகக் கணக்குப் போட்டு அதன் படியே எல்லா வரிகளும் காப்புறுதிகளுக்கான பணங்களும் அறவிடப்படும். இது மிகவும் அதிகம். இதன் காரணமாகவே நானுறுஆயிரம் விலைமாதர்களில் ஒருவர் கூடப் பதிந்து கொள்ள முன்வரவில்லை.

பால்வினைத் தொழில் பற்றிய எனது ஒரு கட்டுரையில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்.
வாசிக்க விரும்பினால்... இங்கு

NONO said...

இதை அங்கிகரிக்கப்பட்ட தொழிழாய் மாற்றுவதுதான் சிறந்தவழி என எனக்கும் படுகின்றது!!!