Tuesday, July 19, 2005

சல்மான் கான் ஒரு தேசத்துரோகி சொல்கிறது பா ஜ க!

மும்பை திரைப்பட உலகிலிருந்து ஒரு குழு பாஜக தலைவர் கோபிநாத் முன்டேயை சந்தித்துவிட்டு தோல்வியுடன் திரும்பியிருக்கிறது. அவர்களின் கோரிக்கை "சல்மான்கானின் பிரச்சினைக்காக தயாரிப்பாளர் காசு போட்டு படமெடுக்கும் படத்தை ஏன் ஒட விடாமல் தடுக்க வேண்டும். அதனால் நிறைய குடும்பங்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதே". அதை முடியாது(பின்னே அத்வானி உளறலுக்கு பிறகு உருவான பிரச்சினையை திசை திருப்ப இதைதானே பயன்படுத்த முடியும்) என்று மறுத்த அவர் படத்துக்கு எதிரான் போராட்டம்(?) தொடரும் என்று சொல்லிவிட்டார்.

அதற்கப்புறம் தான் இந்த காமெடியான் ஐட்டத்தை செய்தியில் படித்தேன். சல்மான்கான் ஒரு தேசத்துரோகி என்று பாஜக'வினர் சொல்கின்றனர் என்று.

ஒருநாள் பாராளுமன்றம் நடத்த எவ்வளவோ கோடி செலவாகுதாமா! ஆனா இந்த கட்சி வாரக்கனக்குல அதை நடத்த முடியாம் பண்ணிச்சே அப்ப எவ்வளவு பணம் நாட்டுக்கு நட்டம். எவ்வளவு பிரச்சனையை கவனிக்காம் இருந்திருப்பாய்ங்க. அது தேசத்துரோகமில்லையா??

நாட்டுல எவ்வளவோ பிரச்சினை இருக்கும்போது ஒண்ணுமில்லாத பாபர் மசூதி பிரச்சினையை ஊதி பெருசு பண்ணினாய்ங்களே அது தேசத்துரோகமில்லையா??

இதிலே இவிங்க அடுத்தவங்களை(குடிபோதையில் ஒரு நடிகர் பேசிய வார்த்தைகளை வைத்துகொண்டு அதுவும் இன்னும் விசாரணையிலிருக்கும் நிலையில்) சொல்கிறாய்ங்க!!!!

அட தேவுடா!!!!!!!!!!!!

2 comments:

Sud Gopal said...

"சல்மான்கான் ஒரு தேசத்துரோகி என்று பாஜக'வினர் சொல்கின்றனர்"
எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்ன்னு காத்திட்டு இருக்கிறவங்க தானே அவங்க.

அதுவும் அத்துவானி அய்யா சின்னாவைப் பத்தி கருத்து சொன்ன பிரச்சினையில இருந்து எல்லார்த்தையும் திச திருப்ப ஏதாவது புதுப் பிரச்சினை தேடிட்டு இருந்தாங்க.

வெறும் வாய்களுக்கு மெல்லுவதுக்கு அவல் கிடைச்ச கத தான்.

நடக்கட்டும்..நடக்கட்டும்..

Anonymous said...

அத்வானி "ஜின்னா"பிண்ணமானதிலிருந்து அவரையும் தங்களின் கட்சியையும் காப்பாற்ற ப.ஜ.க.வுக்கு கிடைத்துள்ள சூளாயுதம்தான் சல்மான்கான் பிரச்சனை. இதனை ஒரு பிரச்சனையாக கருதாத அனைருமே தேசதுரோகிகள் என்று மிக விரைவில் அறிக்கைவிடுவார்கள்.