Thursday, July 14, 2005

நெஞ்சு பொறுக்குதில்லையே !!!!!

என் நண்பன் ஒருவனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவனது தந்தை ஒரு ரோடு காண்டிராக்டர்.
கொஞ்ச காலம் முன்பு ஒரு ரோடு காண்டிராக்டு (ரூபாய் 20 கோடி மதிப்பு) விஷயமாக தமிழகத்தை சேர்ந்த ஒரு மத்திய மந்திரியை பார்க்க போயிருந்தார்களாம் அதுவும் சும்மாயில்லை ஒரு பலமான சிபாரிசோடு. அவரின் பிஏ எல்லாம் விசாரித்துவிட்டு சொன்ன விஷயம் 10% கமிஷன் கொடுத்துவிட்டு காண்டிராக்டு எடுத்துகொள்ளலாம் என்று. நான் அதிர்ச்சியாகி 10% என்றால் அதிகமில்லையா என்றேன். அதற்கு அவன் இது தான் கரண்ட் ரேட் என்றான். அதற்கப்புறம் சேகரித்த விஷயங்களை கீழே தருகிறேன்.

மந்திரி கமிஷன் -> 10 %
RTO கமிஷன் -> 1-2% (லாரிகளில் ஒரு குறிப்பட்ட அளவுதான் ஜல்லி எடுத்துசெல்ல வேண்டுமாம் ஆனால் அதன்படி செயல்பட்டால் அதிக லாபம் பார்க்க முடியாது எனவே இந்த கமிஷன் இதற்கு மேலும் கூட ஆகலாமாமம் ஆனால் இது அவருக்கு மட்டுமல்ல அலுவலகத்தில் உள்ள மற்றவர்களுக்கும் சேர்த்துதான்)
Bill பாஸ் கமிஷன் -> 1-2% (பில் பாஸ் பன்னும் அதிகாரி வேண்டுமென்றே நாள் கடத்துவாராம் அவரை சரிகட்ட இது)
உள்ளூர் எம் எல் ஏ -> 2% (இது ஒரு எழுதப்படாத விதி)
காண்டிராக்டு சிபாரிசு செய்தவர்க்கு - 1%
மத்த Adjustments -> 5% (மாமா வேலை பார்க்கறதுக்கும் சேர்த்துதான்)
காண்டிராக்டர் லாபம் -> 15%- 20%

இதெல்லாம் சேர்த்தே கிட்டத்தெட்ட 35%. அப்போ அரசாங்கம் குறிப்பட்ட ஒரு ரோடு போட 100 ரூபாய் ஒதுக்கினா போட்டப்பட்ட ரோடோட மதிப்பு 65 ரூபாய்தான். இந்த காண்டிராக்டு ஒரு தேசிய நெடுஞ்சாலைக்கானது. இங்கு தரத்தை ஒரளவாவது கடைப்பிடிக்கவேண்டும். இதுவே சாதாரண சாலைகள் என்றால் தரம் மிகவும் மட்டமாக இருக்கும். அங்க செலவு செய்யப்படும் தொகை இக்கணக்கின் படி பார்த்தால் நிச்சயம் 50 சதவிகித்திற்கும் குறைவாகத்தான் இருக்கும்.

ஆகவே, அரசாங்கம் வருடத்திற்கு 1000 கோடி ரூபாய் சாலை மேம்பாடுகளுக்கு ஒதுக்கினால் செய்யப்பட்ட பணியின் மதிப்பு கிட்டத்தெட்ட 600 கோடிக்குதான் இருக்கும். மீதி 400 கோடி பணந்தின்னி வல்லூறுகளுக்கு போய்விடும். இதுக்கு உலகவங்கிகிட்ட அப்பப்ப கடன் வேறு. கண்டவன் ஃபாரின் காரில் போவதற்கும், ஏ சி ரூமில் தண்ணியடிக்கவும், பொண்டாட்டிக்கு அவ எடைக்கு நிகராக தங்கம் போடுதற்கும், பசங்களை பாரின்ல படிக்க வைக்கிறதுக்கவும், நாம் வட்டி கட்டி மாரடிக்க வேண்டியதாயிருக்கு.


அட தேவுடா!!!!!!!!!!!!!!!!

5 comments:

Ganesh Gopalasubramanian said...

கொஞ்சம் அதிகமாத்தான் இருக்கு....
65%ல் தான் ரோடே போடறாங்களா.......
இதென்ன அந்நியன் பட்டியல விட பயமுறுத்துற மாதிரி இருக்கு

Anonymous said...

என்னங்க அன்னியன் அம்பி புலம்புகிற மாதிரி புதுசா பிறந்த மாதிரி புலம்புகின்றீர், உங்க வயசென்ன ஒன்றா

வானம்பாடி said...

65% என்பது பரவாயில்லை என்றே தோன்றுகிறது, நான் இன்னும் குறைவாகவே செலவு செய்வார்கள் என்று நினைத்திருந்தேன். 100% சதவிகிதமும் செலவு செய்யப்படாமலேயெ காசு இந்த வல்லூறுகளுக்கு போஇ சேர்ந்த கதை எல்லாம் எங்கள் ஊரில் நடந்திருக்கிறது 10 வருடம் முன்பு. மிகையல்ல நான் சொல்வது, உண்மை.

வீ. எம் said...

கமிஷன் விலைவாசி ஏறுதுங்கோ !! கூடிய சீக்கிரம் பாருங்கோ ..
40% ரோடு போட்டா பெருசு.... !

100% ஒதுக்கறதும் அரசங்கம் தான்.. அதுல ஒரு 35% சைட்ல ஒதுக்கிகறதும் அரசாங்கத்தை சார்ந்தவர்கள்தான்..
என்னத்த பண்ண?? பேசாம ஒதுக்கும்போதே 135% ஒதுக்கலாம்?? அப்போ 100% ரோடு கிடைக்கும்.. என்ன சொல்றீங்க?
வீ எம்

Vetri Thirumalai said...

அனானிமஸ் அண்ணனுக்கு

நீங்க உங்க பேரிலயே எழுதலாம், ஏண்ணா உங்க கருத்தை தெரிவிக்கறது உங்கள் உரிமை.

சுதர்ஸன் சொன்ன மாதிரி 100% கூட முழுங்கின காலங்கள் இருந்தது. மீடியாக்கள் அதிகமாகி இந்த விஷயங்களெல்லாம் மக்களுக்கு ஒரெளவு தெரிஞ்சதுக்கப்புறம்தான் கொஞ்சம் பணம் அமுக்கறது குறைஞ்சிருக்கு(சதவிகிதம்தான்). ஏதோ நம்மளுக்கு தெரிஞ்ச கணக்கு புதுசா(?) நாலு பேருக்கு தெரியட்டுமுனுதான்(right to information) இந்த வேலையெல்லாம். மத்தபடி புலம்பலா தெரிஞ்சா மன்னிச்சுருங்கனா.....