Tuesday, May 12, 2009

இந்தியனாக இருப்பதற்கு வெட்கப்படுகிறேன்!!

2002-ல் இந்தியா இங்கிலாந்தில் ஒரு கிரிக்கெட் இறுதியாட்டத்தில் தோல்வியின் விளிம்பின் இருந்து வென்றபோது அன்று வீதியில் திரிந்து "ஐ லவ் இந்தியா" என்று போவோர் வருவோரிடம் எல்லாம் கத்தினேன்.

இந்தியா 1998-ல் அமெரிக்க செயற்கைகோள்களை ஏமாற்றிவிட்டு புத்திசாலித்தனமாக தன் இரண்டாவது அனுகுண்டு சோதனையை நடத்திய போது வாரக்கணக்கில் நண்பர்களிடம் பெருமை அடித்துகொண்டிருந்தேன்.
இதைப்போல எத்தனனயோ சம்பவங்கள்....

ஆனால் இன்று?

முட்டாளாய் இருந்திருந்தாலாவது, ராஜபக்க்ஷே மேல் சாபமிட்டு கொண்டு அமைதியாக இருக்கலாம். ஆனால் கொஞ்சூண்டு சிந்திக்க தெரிகிறதே.
இன்று ஈழதமிழர் படும் அத்துனை துன்பத்திற்கும் நான் பிறந்த நான் போற்றிய இந்தியா தான் வேறு எவரும் இல்லை என்ற நிலைமையில் நான் எங்கே போய் என் நாட்டுப்பற்றை வீசுவது.

இன்று அபிஷேக் சிங்வி மற்றும் சுதர்சனம் சொன்னார்கள். அங்கே மக்கள் கொல்லபடுவதற்கு கவலை மட்டும் தான் தெரிவிக்க முடியுமாம். வேறு ஒன்றும் செய்ய இயலாதாம்.

இதை 5 வருஷத்துக்கு முன்னாடியே செஞ்சிருந்தா அவங்க இப்போது நிம்மதியாக் இருந்திருப்பாய்ங்களேயா. இப்படி திட்டம் போட்டு கொன்னுட்டிங்களே..

ஐந்து வருட வராலாறை படித்தால் தான் தெரிகிறது சோனியா ஏன் போனமுறை(2004) ஆட்சிக்கு அலைபாய்ந்தார் என்று.

2004 ல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் சூழ்நிலையில் சோனியா பிரதாமவதற்கு சிக்கல் நேர்ந்தது. கடைசிநேரத்தில் பிரதமாராக அறிவிக்க பட்டது நாம் எல்லோருக்கு தெரியும்.
ஆனால் அதேநேரம் ஈழதமிழர்களுக்கு புதைகுழி தோண்ட சோனியா முதல் பிடி மண்ணை அள்ளியது எவ்வளவு பேருக்கு தெரியும்?

மன்மோகன் சிங் பிரதமரென தீர்மானிக்கப்பட்டது கூட கடைசி நேரத்தில் தான். ஆனால் அதற்கு முன்பே இரண்டு முக்கிய பதவிகளை சோனியா தீர்மானித்து விட்டார்.

ஒன்று - தேசிய பாதுகாப்பு ஆலோசகர்
இரண்டு - பிரதமரின் சிறப்பு ஆலோசகர் உள்நாட்டு பாதுகாப்பு.

முதல் பதவிக்கு அமர்த்தபட்டவர் J.N. தீக்க்ஷித். இந்திய அமைதி(?)படைக்கும் புலிகளுக்கும் யுத்தம் மூட்டிவிட்டதில் இவரின் பங்கு ஜெயவர்த்தனேவுக்கு நிகரானது என்று ஈழத்தை படித்த அனைவருக்கும் தெரியும்.

இரண்டாவது பதவிக்கு, 1992-ல் ஓய்வு பெற்று பன்னிரண்டு வருடம் ஈசி சேரில் அமர்ந்து ஹிந்து பேப்பர் படித்து கொண்டிருந்த எழுபது வயது இளைஞரான M.K. நாராயணன் அமர்த்தபட்டார்.
ஈழவிவகாரத்தில் 1987 முதல் 1990 இவர் செய்த குழப்பம் அதிகாரவர்க்க மேல்மட்டத்தில் மிக பிரசித்தம்.

ஆகவே இப்படியாக , இந்த நூற்றாண்டில் மிகப்பெரிய கொலைகளத்திற்கான திட்டத்தை ஐந்து வருடத்திற்கு முன்னமே நம் பாரதத்தின் பெருமைக்குரிய இரவல் அன்னை வெற்றிகரமாக அடிக்கல் நாட்டினார்.

ஆனால் இன்று தீவுத்திடலில் முழங்குகிறார், நாங்கள் தமிழருக்கு சம உரிமை கிடைக்க பாடுபடுவோம் என்று.

இதை கேட்கிற என் காதுகளுக்கு எங்கே சென்று ஈயத்தை ஊத்துவது.

எங்கே சென்று இந்த அவலத்தை முறையிடுவது. கண்டிப்பாக கடவுளிடம் இல்லை. அப்படி ஒருவர் இருந்தால் இந்நேரம் வந்திருக்கவேண்டுமே!!

5 comments:

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

People call me "Paul"... said...

இந்தியனாக இருப்பதற்கு வெட்கப்பட ஒன்றுமில்லை. ஆங்காங்கே சில பிழைகள் நிகழ்கின்றன என்பதற்காகவும் சிலர் பிழை செய்கிறார்கள் என்பதற்காகவும் இந்தியாவை எதற்கப்பா ஒட்டுமொத்தமாக வெறுக்கிறாய்.. வேண்டுமானால் தலைப்பை 'வெறுக்கத்தக்க சில இந்தியர்கள்..' என்று மாற்றி அவர்களை பற்றி எழுதலாமே..

எல்லாளன் said...

சகஉதிரமே,உம்மை போன்றவர்களின் எமக்கான கவலைகளும் பாசமும் ,நீர் எமக்காக உதிர்க்கும் இரத்தகண்ணீரும் எமக்கு புதுஇரத்தம் பாய்ச்சிகின்றன-எம் தோளில் தட்டி நான் இருக்கின்றேனடா உனக்காக என்று துணிவு தருகின்றது.நம் கண்களில் இனி கண்ணிர் வரா.ஒவ்வொரு முனையிலும் இன்னும் இன்னும் தொடர்ந்து போராடுவோம்,சோர்வுகளை தூக்கி எறிந்துவிட்டு.I LOVE YOU,DEAR FELLOW TAMILNADU TAMIL BROTHERS AND SISTERS

mrknaughty said...

நல்லா இருக்கு
thanks
mrknaughty

Ramesh Ramar said...

Great article with excellent idea! I appreciate your post. Thanks so much and let keep on sharing your stuffs.
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper | Kollywood News